/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஸ்டார் வடி வ தீப்பந்தம் சுற்றி 130 மாணவர்கள் சாதனை
/
ஸ்டார் வடி வ தீப்பந்தம் சுற்றி 130 மாணவர்கள் சாதனை
ஸ்டார் வடி வ தீப்பந்தம் சுற்றி 130 மாணவர்கள் சாதனை
ஸ்டார் வடி வ தீப்பந்தம் சுற்றி 130 மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 14, 2025 11:38 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில் சிலம்பாட்ட மாணவர்கள் 130 பேர், தொடர்ந்து 20 நிமிடங்கள் ஸ்டார் வடிவ தீப்பந்தம் சுற்றி சாதனை படைத்தனர்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடம் சார்பில், நேற்று முன்தினம் சிலம்பாட்ட உலக சாதனை நிகழ்வு நடந்தது. கும்மிடிப்பூண்டி என்.எம்.எஸ்., நகரில் நடந்த நிகழ்வை, தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.
பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன், துணை தலைவர் கேசவன், சிலம்பாட்ட பயிற்சியாளர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில், சிலம்ப கலைக்கூட மாணவர்கள், 130 பேர், தொடர்ந்து 20 நிமிடங்கள் ஸ்டார் வடிவ தீப்பந்தத்தை சுற்றி சாதனை படைத்தனர்.
இவர்களது சாதனை, 'யுனிக்கோ' உலக சாதனையில் இடம் பிடித்தது. மாணவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு சாதனைக்கான சான்றுகள் வழங்கப்பட்டன.