/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலம் விற்பதாக ரூ.13.50 லட்சம் மோசடி
/
நிலம் விற்பதாக ரூ.13.50 லட்சம் மோசடி
ADDED : பிப் 24, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:. :நகரைச் சேர்ந்தவர் சிவதாசன், 50. திரு.வி.க., நகரில் டீ கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2019ல், கொளத்துார், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, 46 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி மாரிமுத்து, புழல், கதிர்வேடில், மாரிமுத்துவின் 600 சதுர அடி நிலத்தை விற்பனை செய்வதாக கூறி, சிவதாசனிடம் 13.50 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியுள்ளார்.
இந்த மோசடி தொடர்பான வழக்கு விசாரணை, மாதவரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்க கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, புழல் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர்.