/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி உண்டியல் வசூல் ரூ.1.40 கோடி
/
திருத்தணி உண்டியல் வசூல் ரூ.1.40 கோடி
ADDED : ஜன 05, 2024 08:26 PM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
மேலும் கடந்த மாதம் வைகுண்டா ஏகாதசி கிருத்திகை, அரையாண்டு விடுமுறை, டிச.,31ம் தேதி படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் என தொடர் விழாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்தனர்.
கடந்த, 35 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை நேற்று முன்தினம் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியல் திறந்து எண்ணினர்.
இதில், 1 கோடியே, 40 லட்சத்து, 11 ஆயிரத்தி 93 ரூபாய், 429 கிராம் தங்கம், 8 கிலோ 565 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.