/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கே.ஜி.கண்டிகை பகுதியில் 15 புதிய மின்மாற்றிகள் அமைப்பு
/
கே.ஜி.கண்டிகை பகுதியில் 15 புதிய மின்மாற்றிகள் அமைப்பு
கே.ஜி.கண்டிகை பகுதியில் 15 புதிய மின்மாற்றிகள் அமைப்பு
கே.ஜி.கண்டிகை பகுதியில் 15 புதிய மின்மாற்றிகள் அமைப்பு
ADDED : ஏப் 26, 2025 02:12 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. வீடுகள் மற்றும் விவசாய கிணறுகளுக்கு அதிகளவில் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக, வீடுகள் மற்றும் விவசாய மின்மோட்டார்களுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்ததால், விவசாயிகள் மின்மோட்டார்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் ஊராட்சிகளில், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கும் மின்மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றுவதற்கு முடியாமல் ஊராட்சி நிர்வாகம் அவதிப்பட்டு வந்தது.
இது குறித்து திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் மற்றும் கே.ஜி.கண்டிகை துணை மின்நிலைய உதவி பொறியாளர் ஆறுமுகம் ஆகியோருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மின்வாரிய உதவி பொறியாளர் ஆறுமுகம் முயற்சியில் , கூடுதல் மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக 15 இடங்களில் சீரான மின்சாரம் வினியோகம் செய்வதற்கு, 63 கே. வி. திறன் கொண்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
தற்போது புதிய மின்மாற்றிகள் மூலம் மின்வினியோகம் செய்வதால், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

