/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் மதிய உணவு சாப்பிட்ட 15 கூலித் தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம்

ADDED : ஜன 05, 2025 08:16 PM
திருத்தணி,:திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன், 55. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் நடவு பணி நடந்தது.
இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த 6 பேரும், ஆந்திர மாநிலம் விஜயபுரம் மண்டலம் பாடூர் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் நெல் நடவு மற்றும் நாற்று பறித்தல் பணியில் ஈடுபட்டனர்.
மதியம் 1:30 மணிக்கு கூலித் தொழிலாளர்களுக்கு நில உரிமையாளர் மதிய உணவு வழங்கினார். உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு ஆண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அங்கிருந்த தொழிலாளி ஒருவர், சாம்பாரில் பல்லி விழுந்ததாக கூறியதும், உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த, 5 பெண்கள் உட்பட 15 பேர் தங்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்படுவதாக கூறியதால் அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், வாந்தி, மயக்கம் ஏற்பட்ட இருவருக்கு உணவு செரிமான பிரச்னை காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது.
தொடர்ந்து மருத்துவர் கூலித் தொழிலாளர்களுக்கு உணவில் எவ்வித பாதிப்பும் இல்லை என, முதலுதவி அளித்து, 15 பேரும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று உடனே அவர்களது வீட்டிற்கு சென்றனர்.