/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1.50 லட்சம் பனை விதை நட திட்டம்
/
1.50 லட்சம் பனை விதை நட திட்டம்
ADDED : அக் 27, 2025 11:21 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 1.50 லட்சம் பனை விதைகளை மூன்று நாட்களில் நட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகியவை இணைந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் 1.50 லட்சம் பனை விதைகளை, புதிதாக வெட்டிய குளம், துார்வாரிய வாய்க்கால் மற்றும் கரையோரங்களில் நட திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்குள், அனைத்து ஊராட்சி, வட்டாரங்களிலும், ஊரக வளர்ச்சி துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் சேர்ந்து பனை விதை நட உள்ளனர். பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். பனை இயக்கம் என்ற சிறப்பான தனி இயக்கத்தை வலுசேர்க்கும் விதமாக இப்பணியை செய்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

