/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பெஞ்சல்' புயலால் 16 மாடுகள் பலி
/
'பெஞ்சல்' புயலால் 16 மாடுகள் பலி
ADDED : டிச 03, 2024 09:12 PM
திருத்தணி:'பெஞ்சல்' புயலால் கடந்த 30ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை அவ்வப்போது பலத்த மழையும், மீதமுள்ள நேரத்தில் மழையும் தொடர்ந்து பெய்தது.
குறிப்பாக, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் முழுதும் பரவலாக பெய்த மழையால் ஏரி மற்றும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றன. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும் காணப்பட்டன.
இந்நிலையில் கால்நடை துறையின் திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் எஸ்.தாமோதரன் கூறியதாவது:
'பெஞ்சல்' புயலால் நேற்று முன்தினம் வரை, 9 பசு, 6 எருமை, ஒரு எருது, 8 கன்று குட்டிகள், 5 வெள்ளாடுகள் மற்றும், 200 கோழிகள் என மொத்தம், 229 கால்நடைகள் மழையால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
மழையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கால்நடைகளுக்கு உதவி மருத்துவர்கள் வாயிலாக சிகிச்சை மற்றும் முதலுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.