/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விரைவு ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்
/
விரைவு ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஜன 29, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, நேற்று காலை சென்ற சர்க்கார் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் சரக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கண்ட ரயிலில், ஆந்திர மாநிலம் நெல்லுாரில் ஏறிய போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, கேட்பாரற்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 16 கிலோ கஞ்சா பண்டல்கள் சிக்கின.
பறிமுதல் செய்து கஞ்சாவுடன், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் போலீசார் இறங்கினர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.