/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுமுறை கால விதிமீறல் 1,640 வழக்குகள் பதிவு
/
விடுமுறை கால விதிமீறல் 1,640 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 19, 2024 01:29 AM
திருவள்ளூர்:பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்க, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையம் மற்றும் 5 போக்குவரத்து காவல் நிலைய போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 1,640 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது, 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல், தலைகவசம் அணியாமல் மற்றும் மூன்று பேர் பயணம் செய்தல், அதிவேகமாக ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக, 1,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், சாலையோரத்தில் மது அருந்தியதாக, 127 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மொத்தம், 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொது இடத்தில் சூதாட்டம் ஆடியதாக ஐந்து பேர் மற்றும் திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு அதிக விலைக்கு சரக்கு விற்பனை செய்த 88 பேர் என, மொத்தம் 1,640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி., சீபாஸ் கல்யாண் தெரிவித்தார்.

