ADDED : ஏப் 17, 2026 02:46 AM
அ நிறம் | அளவு
மணவாளநகர்: மணவாளநகர் அருகே கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 170 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, பெண் ஒருவரை கைது செய்தனர்.
மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயப்பாக்கம் பகுதியில், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, திருவள்ளூர் எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி, நேற்று மதியம் மணவாளநகர் போலீசார், நயப்பாக்கம் பகுதியில் மாரியம்மாள், 58, என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, 170 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், மாரியம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
