/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவிலில் கிருத்திகை விழா பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்
/
முருகன் கோவிலில் கிருத்திகை விழா பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்
முருகன் கோவிலில் கிருத்திகை விழா பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்
முருகன் கோவிலில் கிருத்திகை விழா பாதுகாப்பு பணியில் 1,700 போலீசார்
ADDED : ஆக 11, 2025 11:10 PM
திருத்தணி, முருகன் கோவிலில் வரும் 14ம் தேதி முதல் ஐந்து நாட்கள் ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. இதற்காக 1,700 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா என, ஐந்து நாட்கள் திருவிழா நடக்கும்.
இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகபெரு மானை தரிசிப்பர்.
அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை விழா வரும், 14ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, 15ம் தேதி ஆடிப்பூரணியும், 16ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவும், 17ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 18ம் தேதி மூன்றாம் நாள் தெப்பமும் நடக்கிறது.
ஐந்து நாட்கள் விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், திருவள்ளூர் எஸ்.பி., விவோகனாந்த சுக்லா தலைமையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து 1,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
ஐந்து கூடுதல் டி.எஸ்.பி.,க்கள், 11 டி.எஸ்.பி.,க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 50 எஸ்.ஐ.,க்கள் உள்பட 1,700 போலீசார் ஐந்து நாட்கள் பாதுகாப்பு பணியில் இருப்பர்.
பக்தர்களிடம் இருந்து திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கு, சாதாரண உடையிலும் தனிப்படை போலீசார், 24 மணி நேரமும் ரோந்து பணியிலும் ஈடுபட உள்ளனர்.