தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகள் பறிமுதல்

சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகள் பறிமுதல்

சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகள் பறிமுதல்


UPDATED : ஆக 26, 2026 09:36 PM

ADDED : ஆக 26, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 09:36 PM ADDED : ஆக 26, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த, 18 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் நகராட்சியில், போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி வருவதால், விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாலையில் கால்நடைகளை திரிய விடக்கூடாது என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்தும், கால்நடை உரிமையாளர்கள் அதை அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கலெக்டர் கவிதா உத்தரவின் பேரில், நகராட்சி கமிஷனர் தாமோதரன் அறிவுரையின்படி, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை, திருவள்ளூர் நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் உலா வந்த 18 மாடுகளை, நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பிடிக்கப்பட்ட மாடுகளை, நகராட்சி அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.

இதுகுறித்து, சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:

நகர பகுதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 18 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில், மூன்று மாடுகளை, அபராதம் செலுத்தி, அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் சென்றுள்ளனர்.

கடந்த ஓராண்டில், 105 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2.29 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால், அவற்றை பறிமுதல் செய்து, கால்நடைகளை பாதுகாக்கும் கோசாலையில் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us