ADDED : ஜன 30, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து வரும் மின்சார ரயிலில், கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., மகாலிங்கம் தலைமையிலான மாவட்ட சிறப்பு படையினர், நேற்று கும்மிடிப்பூண்டியில் ரயிலில் சோதனை செய்தனர். அதில் பயணித்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா, 19 மற்றும் 16 வயது சிறுவனிடம், 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த கஞ்சா, கைதான இருவரையும் கும்மிடிப்பூண்டி கலால் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.