ADDED : மார் 21, 2024 12:13 AM

திருவள்ளூர்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், 90 பறக்கும் படை மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், காரில் இருந்த, 17.39 லட்சம் ரூபாய், 26 கிராம் தங்க நகை இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், மகளின் திருமணத்திற்கு நகை வாங்க பணம் கொண்டு வந்ததாக, காரில் வந்தவர் தெரிவித்தார்.
இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால், பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவற்றை திருவள்ளூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். மேலும், பூந்தமல்லி, வரதராஜபுரம் மேம்பாலம் அருகில், நிலை கண்காணிப்பு குழு நடத்திய வாகன சோதனையில், 86,000 ரூபாய் மற்றும் 198 பாக்கெட் பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடம்பத்துார்
தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், கடம்பத்துார் ஒன்றிய துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பாக்கியவதி மேற்பார்வையில் காவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள் எங்கு செல்கிறீர்கள் எனவும் விளக்கம் கேட்டறிந்து கார் முழுதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
