தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இரு தரப்பினர் மோதல் 2 பேர் காயம்; மூவர் கைது

இரு தரப்பினர் மோதல் 2 பேர் காயம்; மூவர் கைது

இரு தரப்பினர் மோதல் 2 பேர் காயம்; மூவர் கைது


ADDED : செப் 15, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி, செப். 16–

திருத்தணி அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர், 26, விநாயகம், 40. இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது.

நேற்று, நிலம் தொடர்பாக பாஸ்கர், விநாயகத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஸ்கருக்கு ஆதரவாக சித்தன், கஜேந்திரன், ஈஸ்வரன் ஆகியோரும், விநாயகத்திற்கு ஆதரவாக விஸ்வநாதன், சந்திரபாபு, மாதவன் ஆகியோரும், உருட்டு கட்டை, இரும்பு கம்பிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில், சந்திரபாபு, சித்தன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, பாஸ்கர், விநாயகம் மற்றும் விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us