ADDED : டிச 08, 2024 08:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஆந்திர மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக லாரி வாயிலாக ஆற்று மணல், சிவாடா வழியாக, திருவள்ளூர் பகுதிக்கு கடத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார், என்.என்.கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த ஆந்திரா பதிவெண் கொண்ட லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, லாரி ஓட்டுனர்கள், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, மங்காவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 34, வெங்கடேசன், 36, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் மணல் லாரியை பறிமுதல் செய்தனர்.