ADDED : மே 06, 2025 10:08 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சி, அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஹரீஷ், 17, என்பவர் குறுவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்.
இவரது உறவினரான, ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டம், வைகுண்டபுரம் காவாலி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ், 14, என்பவர், கோடை விடுமுறைக்கு சுரேஷ் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் ஹரீஷ், வெங்கடேஷ் மற்றும் நண்பர்கள் கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றனர்.
இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கினர். இதை பார்த்த நண்பர்கள், கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தேர்வாய்கண்டிகை தீயணைப்புத் துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.
பெரியபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
