/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை விபத்து 2 ஊழியர்கள் கைது
/
தொழிற்சாலை விபத்து 2 ஊழியர்கள் கைது
ADDED : பிப் 12, 2025 09:18 PM
கும்மிடிப்பூண்டி:புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், சூர்யதேவ் என்ற பெயரில், தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 10ம் தேதி, கொதிகலனில் இருந்து சூடான இரும்பு தீக்குழம்பு சிதறியது.
அப்போது, பணியில் இருந்த, ஆறு வடமாநில தொழிலாளர்கள் மீது தீக்குழம்பு தெறித்தது. அவர்களில், ஐந்து பேர் பலத்த தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாகில், 22, என்பவர் உயிரிழந்தார். மற்ற அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், கவனக்குறைவாக செயல்பட்ட, தொழிற்சாலையின் காஸ்டிங் மிஷின் மேலாளரான உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புனித்ராய், 32, ஷிப்ட் பொறுப்பாளரான பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மண்டுகுமார், 27, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

