/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு
/
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உழவாரப் பணியில் 20 பேர் பங்கேற்பு
ADDED : டிச 22, 2024 01:15 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு நேற்று காலை, மதுரையைச் சேர்ந்த, ஓம் நந்தியெம்பெருமான் உழவாரப் பணிக் குழுவைச் சேர்ந்த, 20வினர் வந்தனர். இவர்கள் பித்தளை கம்பிகள், கதவு, சுவாமி பீடம், விளக்குகள் மற்றும் எண்ணெய் கழிவுகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, கொடிமரம், வள்ளி, தெய்வானை, சண்முகர். ஆபத்சகாய விநாயகர், உற்சவர் மற்றும் மூலவர் நுழைவு கதவு, கோவில் நுழைவு கதவு ஆகிய இடங்களில் உள்ள பித்தளை கதவு, வரிசை கம்பிகள் போன்ற பித்தளை சம்பந்தமான பொருட்களை சுத்தம் செய்தனர். மேலும், எண்ணெய் கழிவுகளை சுத்தம் செய்தும், விளக்குகளை துாய்மைப்படுத்தினர்.
இது குறித்து, ஓம் நந்தியெம்பெருமான் உழவாரப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் அசோகன் கூறியதாவது:
எங்கள் குழுவில், 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அனைவரும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறோம். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசு விடுமுறை நாளில் ஒரு நாள், ஒரு கோவில் என தேர்வு செய்து, சுத்தம் செய்யும் உழவார பணிகள் இலவசமாக செய்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் நேற்று, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்து சுத்தம் செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.