ADDED : டிச 21, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு, 2,008 வடமாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன் கோவில் வளாகத்தில், 5 அடி பீடத்தின் மீது, 15 அடி உயரம் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப பக்த ஆஞ்சிநேயர் சன்னிதி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேய பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.
திருவேங்கிடபுரம் திருவேங்கடமுடையான் திருக்கல்யாண குழு சார்பில், விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு, 2,008 வடமாலை சாற்றப்பட்டது. முன்னதாக, வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து திருக்குடைகளுடன், உற்சவர் ஆஞ்சநேயர் உலா வந்தார்.

