/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
21 நாள் கோடைகால இலவச பயிற்சி முகாம்
/
21 நாள் கோடைகால இலவச பயிற்சி முகாம்
ADDED : ஏப் 21, 2025 11:40 PM
திருவள்ளூர்,
திருவள்ளூர் விளையாட்டு அரங்குகளில், 21 நாள் இலவச கோடைகால பயிற்சி முகாம், வரும் 25ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடப்பு ஆண்டிற்கான கோடைகால பயிற்சி முகாம், வரும் 25 - மே 15 வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு காலை - மாலை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி மற்றும் 'வுஷூ' ஆகிய ஐந்து விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
இதில், 18 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். தடகளம், கால்பந்து மற்றும் 'வுஷூ' ஆகிய மூன்று விளையாட்டுகள், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், 'ஹாக்கி' விளையாட்டு ஆவடியில் உள்ள காஸ்மோஸ் எச்.வி.எப்., மைதானத்திலும், வாலிபால் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, ஆவடியிலும் நடைபெறும்.
பயிற்சியில் சேர, லாவண்யா - தடகளம் - 80729 08634, காயத்ரி - கால்பந்து - 95662 56028, தீபன் - 'வுஷூ' - 99442 90515, வினோத்ராஜ் - வாலிபால் - 98940 28353 மற்றும் இளங்கோ - ஹாக்கி -- 94448 45842 ஆகிய எண்களில் பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளலாம். இலவசமாக நடைபெறும் பயிற்சி முகாமின் இறுதியில், சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.