/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
21 கிலோ கஞ்சா பறிமுதல்; ஐந்து பேர் கைது
/
21 கிலோ கஞ்சா பறிமுதல்; ஐந்து பேர் கைது
ADDED : பிப் 09, 2024 11:49 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் ஜே.என்.சாலை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக பெரியபாளையம் போதைப்பொருள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு உதவி ஆய்வாளர் சிவா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்த திருவள்ளூர் போதைப்பொருள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் ஞானஅருள் ராஜாமணி உத்தரவின்படி உதவி ஆய்வாளர் சிவா மற்றும் போதைப்பொருள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஜே.என். சாலை பகுதியில் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்திபுரம் பகுதியில் பிராங்க்ளின், 23 என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு 4.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 'ரெட்மீ, நோக்கியா மற்றும் இரு ஐ-போன்கள்' என மொத்தம் 4 மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் போதைப்பொருள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பிராங்க்ளின் மற்றும் அவரது நண்பர்களான திருநின்றவூர் லிப்பு, 22 பாடியநல்லுார் அஜீத், 24, பட்டாபிராம் கார்த்திக், 23, அயப்பாக்கம் கோகுல்ராஜ். 19 என ஐந்து பேரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
lகும்மிடிப்பூண்டி அருகே அயநல்லுார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., மகாலிங்கம் தலைமையிலான சிறப்பு படையினர், சோதனையிட்ட போது ஒரு வீட்டில், மூன்று கிலோ கஞ்சா சிக்கியது.
பதுக்கிய பொன்னேரி பகுதியைச் சேர்ந்த விஜயன், 31, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விலைக்கு கஞ்சா வாங்கிய, காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம், மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு, 1.20 லட்சம் ரூபாயாகும்.