/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மீது வேன் மோதி 21 பேர் படுகாயம்
/
லாரி மீது வேன் மோதி 21 பேர் படுகாயம்
ADDED : ஜன 10, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மதுபான தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்களுடன், கூடுவாஞ்சேரி, முடிச்சூர், படப்பை பகுதிகளில் இருந்து நேற்று வேன்   சென்றது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த், 26, வேனை ஓட்டிச்சென்றார்.  குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கத்தை கடந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியது.
ஓட்டுநர் ஆனந்த் மற்றும் வேனில் இருந்த 18 பெண்கள் உட்பட, 21 பேர் காயங்களுடன் மீடக்கப்பட்டனர். ஓட்டுநர் தவிர மற்றவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

