/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:56 AM
ஊத்துக்கோட்டை:பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில், 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் முக்கிய நீர் ஆதாரம்.
கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக வரும் கிருஷ்ணா நீர் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை ஆகியவற்றால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில், 2.1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம், 31.50 அடி. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 300 கன அடி நீர் வரத்துள்ளது. இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 300 கன அடி நீர், புழல் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.