/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜமாபந்தியில் 215 மனுக்கள் ஏற்பு
/
ஜமாபந்தியில் 215 மனுக்கள் ஏற்பு
ADDED : மே 22, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த, 20ம் தேதி துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்து வரும் நிகழ்ச்சியில், முதல் நாளில், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட தேவைகள் குறித்து, 116 மனுக்கள் ஏற்கப்பட்டன. இரண்டாவது நாள் 45 மனுக்கள், மூன்றாம் நாளான நேற்று 54 மனுக்கள் என மொத்தம், 215 மனுக்கள் ஏற்கப்பட்டன.
இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி விரைவில் தீர்வு காணப்படும் என தாசில்தார் ராஜேஷ் தெரிவித்தார்.