/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு சமயஈஸ்வரர் கோவிலில் 2.62 கோடி ரூபாயில் திருப்பணிகள்
/
பழவேற்காடு சமயஈஸ்வரர் கோவிலில் 2.62 கோடி ரூபாயில் திருப்பணிகள்
பழவேற்காடு சமயஈஸ்வரர் கோவிலில் 2.62 கோடி ரூபாயில் திருப்பணிகள்
பழவேற்காடு சமயஈஸ்வரர் கோவிலில் 2.62 கோடி ரூபாயில் திருப்பணிகள்
ADDED : ஜன 13, 2024 09:35 PM

பழவேற்காடு:பழவேற்காடு ஆனந்தவல்லி சமேத சமயஈஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. கோவில் கட்டுமானம் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பினை கொண்டு கட்டப்பட்டு உள்ளது.
இக்கோவிலின் துாண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. சமயஈஸ்வரர் சன்னிதியின் வலதுபுறம் வட்டி வடிவ கிணறும், அதற்கு படிகட்டு வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. இது மற்ற கோவில்களில் காண முடியாத ஒன்றாகும்.
மிகவும் பழமையான இக்கோவில் சிதிலமடைந்து உள்ளது. கோவிலின் முகப்பு, சுற்று சுவர் பகுதிகளில் மரம், செடிகள் வளர்ந்து உள்ளன.
கடந்த ஆண்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் இக்கோவிலில் ஆய்வு செய்தார். கோவிலை புனரமைக்கவும், அணுகு சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அதற்கான பணிகள் நடைபெறாமல் இருப்பதால் பக்தர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது:
கோவில் புனரமைப்பு பணிகளுக்காக, 2.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இம்மாதம், 22ம் தேதி இதற்கான பணிகள் துவங்க உள்ளன.
கட்டடங்கள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. உற்சவர்கள் வைக்க பாதுகாப்பு அறையும் அமைய உள்ளது. அரசின் அனுமதி பெற்ற பாலாயம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

