/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை தாலுகாவில் புதிய வாக்காளராக 2,684 பேர் விண்ணப்பம்
/
ஊத்துக்கோட்டை தாலுகாவில் புதிய வாக்காளராக 2,684 பேர் விண்ணப்பம்
ஊத்துக்கோட்டை தாலுகாவில் புதிய வாக்காளராக 2,684 பேர் விண்ணப்பம்
ஊத்துக்கோட்டை தாலுகாவில் புதிய வாக்காளராக 2,684 பேர் விண்ணப்பம்
ADDED : நவ 27, 2024 10:10 PM
ஊத்துக்கோட்டை:கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், எல்லாபுரம் ஒன்றியத்தில், 44 ஊராட்சிகள், பூண்டி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் தலா, 15 வார்டுகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதியில் 2 லட்சத்து, 72 ஆயிரத்து, 622 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த, 16, 17, 23, 24 ஆகிய நான்கு தேதிகளில் நடந்த முகாமில், ஊத்துக்கோட்டை தாலுகாவில், புதிய வாக்காளர்களாக, 2,684 பேர் விண்ணப்பத்து உள்ளனர். நீக்குவதற்கு, 86 பேர், திருத்தத்திற்கு, 743 பேர் விண்ணப்பத்து உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி நடந்த நான்கு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனுப்பி வைக்கப்படும். அதே போல் நீக்கல், திருத்தம் ஆகிய மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் இடம் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.