/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
48 இருளர் இன மக்களுக்கு ரூ.2.72 கோடியில் வீடுகள்
/
48 இருளர் இன மக்களுக்கு ரூ.2.72 கோடியில் வீடுகள்
ADDED : ஜன 24, 2024 11:44 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலத்தில் இருளர் இன மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு, தமிழக முதல்வரின் உத்தரவின்படி, 2022 ஜூலை மாதம் கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில், அதிகத்துார், 64, ஏகாட்டூர், 14, பிஞ்சிவாக்கம், 10, நயப்பாக்கம், 21, கடம்பத்துார், 20, திருப்பாச்சூர், 47, கண்ணம்மாபேட்டை, 24, தொடுகாடு, 17 என மொத்தம் 217 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 78 பேருக்கு அரசு சார்பில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.
நேற்று அதிகத்துார் பகுதியைச் சேர்ந்த 48 இருளர் இன மக்களுக்கு, தலா 5.75 லட்சம் மதிப்பில் ஹூண்டாய் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி மற்றும் யுனெடெட் வே ஆப் சென்னை தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, 2.72 கோடியில் வீடு கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில், கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி மற்றும் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகிக்க, கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பங்கேற்று வீடு கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில், யுனைடெட் வே ஆப் சென்னை முதன்மை அலுவலர் மீனாட்சி மற்றும் ஹூண்டாய் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதன்பின், அப்பகுதியில் வசித்து வரும் வீடில்லா பிற இருளர் இன மக்கள், இப்பகுதியில் வீடு, சாலை வசதி மற்றும் மினி பேருந்து வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
வரும் காலங்களில், வீடில்லாத இருளர் இன மக்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டரிடம் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.