/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
283 பெண் காவலர்களுக்கு திருவள்ளூரில் பயிற்சி
/
283 பெண் காவலர்களுக்கு திருவள்ளூரில் பயிற்சி
ADDED : டிச 05, 2024 11:25 PM

திருவள்ளூர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு காவல் துறைக்கு, 2,665 பேர் இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு, திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் துாத்துக்குடி ஆகிய எட்டு நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 2,665 காவலர்களில், 792 பெண் ஆயுதப்படை காவலர்களுக்கு, திருவள்ளூர் 300, வேலுார் 200, விழுப்புரம் 292 ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, ஆண் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் 1,861 மற்றும் பின்தங்கிய ஆயுதப்படை ஆண் காவலர்கள் 12 சேர்த்து என மொத்தம் 1,873 காவலர்களுக்கு திருச்சி, சேலம், கோவை, மதுரை, துாத்துக்குடி ஆகிய காவலர் பயிற்சி மையங்களில் பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது.
இதில், திருவள்ளூர் மாவட்டம், கனக ளவல்லிபுரம் கிராமத்தில் இயங்கி வரும் திருவள்ளூர் காவல் பயிற்சி பள்ளியில் புதிதாக இரண்டாம் நிலை காவலர்களாக திருவண்ணாமலை, 45, விழுப்புரம், 44, கடலுார், 36, வேலுார், புதுக்கோட்டை, தலா 24, ராமநாதபுரம், 22, தஞ்சாவூர், திருவாரூர், தலா, 19, அரியலுார், 14.
நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, கரூர், தலா 11, மயிலாடுதுறை, 9, திருச்சி, 8, பெரம்பலுார், 3, என மொத்தம் 300 பேர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 283 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு, ஏழு மாத கால அடிப்படை பயிற்சியும் மற்றும் ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் நடைபெறுமெனவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்களுக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வண்டலுாரில் உள்ள காவல் பயிற்சி தலைமையகத்திலிருந்து, காவல் துறை தலைவர் ஜெயகவுரி, துணைத் தலைவர் ஆனி விஜயா ஆகியோர் வரவேற்று அறிவுரை வழங்கி துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் காவல் பயிற்சி பள்ளியில், காவல் பயிற்சி தலைமையக காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, காவலர் பயிற்சி பெற வந்த 283 பெண் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், பெண் காவலர்கள் பணி மேற்கொள்வது குறித்து விளக்கினார்.