ADDED : அக் 03, 2024 02:39 AM

கொளத்துார்:கொளத்துார், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர் கொளத்துார், பள்ளி சாலையில் 'மாபியா ஷாப்' என்ற பெயரில் வளர்ப்பு பறவை விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம், அங்கு வந்த மூவர் கடையை விட்டு சென்ற போது, கடையில் இருந்த ‛லோரி ரெட்' என்ற மூன்று சிவப்பு நிற கிளியை கூண்டோடு திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, ராஜமங்கலம் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே, பைக்கின் அடையாளங்களை வைத்து நேற்று திருடர்களை கைது செய்தனர்.
அவர்கள், பாடியைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான், 30, கொரட்டூரைச் சேர்ந்த விஜய், 28, மற்றும் கொளத்துாரைச் சேர்ந்த கலைச்செல்வன், 31, என்பது தெரிய வந்தது.
சிவப்பு லோரி கிளி வகை, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவை சார்ந்ததாகும். இந்த கிளி 35,000 ரூபாய் மதிப்புடையது.
