/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து 3 பைக் திருட்டு
/
பொதட்டூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து 3 பைக் திருட்டு
பொதட்டூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து 3 பைக் திருட்டு
பொதட்டூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து 3 பைக் திருட்டு
ADDED : ஜூலை 25, 2025 07:56 PM
பொதட்டூர்பேட்டை:அடுத்தடுத்து மூன்று பைக்குகள் திருடு போனதால், பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்தவர் உதயகுமார், 34. இவர், கடந்த 22ம் தேதி மதியம் வீட்டின் வெளியே, 'ஹோண்டா டியோ' பைக்கை நிறுத்தி சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது, பைக் திருடு போனது தெரியவந்தது.
அதே நாளில், பொதட்டூர்பேட்டையில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அன்பு, 39, என்பவர், வீட்டின் முன், 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரிந்தது.
கடந்த 23ம் தேதி மதியம் கோணசமுத்திரத்தைச் சேர்ந்த கேசவன், 45, என்பவர், அத்தி மாஞ்சேரிபேட்டை செல்லும் சாலையில், 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கை நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றார். திரும்பி வந்த போது பைக் காணவில்லை.
இந்த மூன்று திருட்டு சம்பவங்களும், பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளன. அடுத்தடுத்து நடந்த பைக் திருட்டு சம்பவங்களால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.