/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை கழிவுநீரை பருகிய 3 பசுக்கள் பலி
/
தொழிற்சாலை கழிவுநீரை பருகிய 3 பசுக்கள் பலி
ADDED : டிச 08, 2024 08:44 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, சூரவாரிகண்டிகை கிராமத்தில், ‛வி.பி.வி., ரீசைக்கிளிங்' என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு தங்க நகை தயாரிக்கும் போது வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்து, தங்கத்தை பிரித்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதன் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த கோபி, 25, சந்திரய்யா, 65, முருகேசன், 55, ஆகியோருக்கு சொந்தமான, மூன்று பசு மாடுகள் நேற்று முன்தினம் மாலை மேய்ந்துக் கொண்டிருந்தன.
மேற்கண்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவுநீரை பருகிய மூன்று பசுக்களும், அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தன. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தினர் கள ஆய்வு செய்து, பசுக்கள் பருகிய கழிவுநீரை சேகரித்து ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவு வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.