ADDED : ஜூன் 22, 2026 02:57 AM

அ நிறம் | அளவு
சோழவரம்: சோழவரம் அருகே, மின்மாற்றி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்த மூன்று பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.
சோழவரம் அடுத்த ஆத்துார் வி.ஜி.பி., மேடு பகுதியில் உள்ள மின்மாற்றி அருகே, நேற்று மாலை, மூன்று பசு மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன.
அப்போது, மின்மாற்றி அருகே சென்ற மாடுகள், அங்கிருந்த மின் ஒயரில் சிக்கின. அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து, மூன்று பசு மாடுகளும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.
இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், மின் ஒயரில் சிக்கி மாடுகள் இறந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
