ADDED : டிச 26, 2024 09:32 PM
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழகத்திற்கு, திருத்தணி வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதை தடுக்கும் வகையில், எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசார், திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், வாகன நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று, திருப்பதியில் இருந்து, தனியார் பேருந்தில் சோதனை செய்த போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அப்டேப், 29, உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஜ்பாபுகான், 26, ஆகியோர், 4 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அதே போல, திருப்பதியில் இருந்து, அரசு பேருந்தில், 5 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்த, திருச்சி மாவட்டம், செந்தமணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். சிறுவனை திருவள்ளூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர்.