ADDED : நவ 26, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி : பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் தீபா, 36, ஆடு வளர்த்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் பிற்பகல், கொட்டகையில் இருந்து ஆடுகள் சத்தமிடுவதை கண்டு தீபா, அங்கு சென்று பார்த்தபோது, இளைஞர்கள் இருவர்,பைக்கில் ஆடு ஒன்றை திருடி சென்றனர்.
இது குறித்து தீபா, பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பாலாஜி நகர் பகுதியில் உள்ள சிசிடிவி., க்களை ஆய்வு செய்தனர்.
அதையடுத்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னேரி அடுத்த முஸ்லீம் நகரை சேர்ந்த அனீப், 29, தவுலத் பாஷா, 19 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து, விசாரித்தனர்.
அதில், இவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, நான்கு ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.