/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவேற்காடு நிலத்தரகர் கொலையில் கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது அம்பலமான கள்ளக்காதல் விவகாரம்
/
திருவேற்காடு நிலத்தரகர் கொலையில் கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது அம்பலமான கள்ளக்காதல் விவகாரம்
திருவேற்காடு நிலத்தரகர் கொலையில் கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது அம்பலமான கள்ளக்காதல் விவகாரம்
திருவேற்காடு நிலத்தரகர் கொலையில் கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது அம்பலமான கள்ளக்காதல் விவகாரம்
ADDED : ஆக 04, 2025 11:11 PM

திருவேற்காடு :திருவேற்காடில் நிலத்தரகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலன், கல்லுாரி மாணவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவேற்காடு, சுந்தரசோழபுரம், டி.டி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் சிவகுமார், 50; நிலத்தரகர். இவரது மனைவி விஜயகுமாரி, 45. தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த 1ம் தேதி, பருத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகளை அழைத்து வர, சிவகுமார் ஆட்டோவில் சென்றுள்ளார். வழியில், இயற்கை உபாதை கழிக்க, கோலடி மயானம் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், கத்தியால் சிவகுமாரின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்தார்.
திருவேற்காடு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், திருவேற்காடைச் சேர்ந்த ரவுடி லால் என்கிற பிரகாஷ், 32, மற்றும் கல்லுாரி மாணவர் மோகன், 20, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கோலடி மைதானத்தில் பதுங்கி இருந்த இருவரையும், போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, சிவகுமாருக்கும், திருவேற்காடைச் சேர்ந்த சுரேஷ், 29, என்பவருக்கும் தொழில் போட்டி மற்றும் 3 லட்சம் ரூபாய் கொடுக்கல் - வாங்கல் தகராறில், கொலை செய்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சுரேஷ் மற்றும் சிவகுமாரின் மனைவி விஜயகுமாரியிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சிவகுமார், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். தொழில் தொடர்பாக, சிவகுமார் வீட்டிற்கு சுரேஷ் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது, அவரது மனைவி விஜயகுமாரியுடன், சுரேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். மேலும், மொபைல் போனில் பேசுவதும், சிவகுமாருக்கு தெரிய வந்துள்ளது. சுரேஷ் மற்றும் மனைவியை சிவகுமார் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிவகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ரவுடி லால் என்கிற பிரகாஷை வைத்து திட்டம் தீட்டி, சிவகுமாரை ஒரு வாரம் வேவு பார்த்து, சம்பவத்தன்று வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
சிவகுமாரின் மனைவி விஜயகுமாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கும், அவருக்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சுரேஷ், ரவுடி லால் என்கிற பிரகாஷ், கல்லுாரி மாணவர் மோகன் ஆகியோரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.