/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆன்லைன் வர்த்தகம் பெயரில் ரூ.30 லட்சம் மோசடி
/
ஆன்லைன் வர்த்தகம் பெயரில் ரூ.30 லட்சம் மோசடி
ADDED : அக் 11, 2024 01:58 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நொச்சிலி ஜி.பி.ஆர் கண்டிகையை சேர்ந்தவர் சண்முகம், 23.
ஆகஸ்டு மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக வாட்ஸாப்பில் தொடர்ந்து செய்திகள் வந்தன.
மேலும், ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்றும் உடனடியாக அந்த செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் அழைப்பு வந்தது.
இதை நம்பிய சண்முகம் தன் மொபைல்போனில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தார்.
ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்குமாறும் கூறப்பட்டிருந்தை அடுத்து, 30 லட்சத்து 16 ஆயிரத்து 520 ரூபாய் செலுத்தி உள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்டவுடன் ஆன்லைன் வர்த்தக செயலியில் இருந்து அவருக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை. முதலீடு செய்வதற்கான எவ்வித ஆதாரமும் அளிக்காமல் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது.
சண்முகம் அளித்த புகாரின்படி திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.