/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் ஜன்னலை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் ஜன்னலை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 22, 2025 08:00 PM
மீஞ்சூர்:மீஞ்சூர், புதுப்பேடு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 67;. கடந்த 17ம் தேதி, இவரது மனைவி மற்றும் மகன்கள் ஷீரடி கோவிலுக்கு சென்றனர். கோபால் மட்டும் வீட்டில் இருந்தார். கடந்த, 18ம் தேதி, திருமண நிகழ்விற்கு சென்னை மாதவரம் சென்ற கோபால், நள்ளிரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறை ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பூஜை அறை மற்றும் பீரோவில் இருந்த நகைகள் திருடு போயிருப்பது தெரிந்தது.
திருடு போன நகைககள் குறித்த விபரம் தெரியாத நிலையில், குடும்பத்தினர் வருகைக்கு காத்திருந்தார்.
நேற்று முன்தினம், இரவு 11:00 மணிக்கு, மனைவி மற்றும் குடும்பத்தினர் ஷீரடியில் இருந்து வீடு திரும்பினர். வீட்டில் வைத்திருந்த, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30 சவரன் நகைகள் திருடு போயிருப்பது தெரிந்தது.
இது குறித்து, மீஞ்சூர் போலீசில் கோபால் அளித்த புகாரையடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

