/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரி கோவில்களில் துாய்மை பணியில் 305 பேர்
/
சிறுவாபுரி கோவில்களில் துாய்மை பணியில் 305 பேர்
ADDED : ஜன 26, 2025 09:58 PM
ஆரணி:அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில், சிறுவாபுரியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி, அகத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில் நடந்த துாய்மை பணிகளில், 305 பேர் பங்கேற்றனர்.
கோவில்களை சுத்தமாக வைத்திருப்பது குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்வலம் சென்றனர். அப்போது, கைலாய வாத்தியம் முழங்க, விழிப்புணர்வு பதாகங்களை ஏந்தியபடி சென்றனர்.
தொடர்ந்து, கோவில் வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர். கோவில்களுக்கு வந்த பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, வலியுறுத்தினர். மாற்றாக, துணிப்பபைகள் பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர்.
இறுதியாக, ஐந்தெழுத்து மந்திரம் ஓதி, பன்னிரு திருமுறை பாராயணம் பாடி உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை செய்து நேற்றைய நிகழ்வை நிறைவு செய்தனர்.