ADDED : ஜூலை 21, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டைதிருநின்றவூர் அடுத்த கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தின், 37ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. 'யுனிப்ரெஸ் இந்தியா' நிதி நிறுவனத்தின் டி.ஜி.எம்., சன்டிபாபு பெசவாடா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்பு மலரை வெளியிட்டார்.
சேவாலயா மற்றும் யுனிப்ரெஸ் இந்தியா நிறுவனம் இடையே, 52 லட்சம் ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இங்கு பணி நிறைவு செய்த ஊழியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு மற்றும் பாடங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.