/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் பிரச்னை தீர்க்க 4 புதிய குடிநீர் தொட்டி
/
குடிநீர் பிரச்னை தீர்க்க 4 புதிய குடிநீர் தொட்டி
ADDED : மார் 05, 2024 06:31 AM
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், மத்துார், அலுமேலுமங்காபுரம், புச்சிரெட்டிப் பள்ளி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் பிரச்னை தீர்க்க புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைப்பது போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என, கிராம சபையில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புச்சிரெட்டிப்பள்ளியில், 53 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள்.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், மத்துார் ஊராட்சி, கொத்துார் கிராமத்தில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி, அலுமேலுமங்காபுரம் ஊராட்சி, சிங்கராஜபுரம் காலனியில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி அமைப்பதற்கு, 33.50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் விரைவில் துவங்கி மூன்று மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு விட ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

