/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மலை தேனீக்கள் கொட்டி தம்பதி உட்பட 4 பேர் காயம்
/
மலை தேனீக்கள் கொட்டி தம்பதி உட்பட 4 பேர் காயம்
ADDED : ஜன 17, 2024 08:16 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 48. இவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, மா இலைகள் பறிப்பதற்காக, நேற்று தன் மனைவி புவனா, 40, மகன்கள் கவி, 16, விஷால், 13, ஆகியோருடன் வயல்வெளிக்கு சென்றார்.
அங்கிருந்த மா மரத்தில் இலைகளை பறிப்பதற்காக கவி மற்றும் விஷாலும் ஏறினர். அப்போது, மரத்தில் இருந்த மலை தேனீக்கள் விஷால், கவியையும் கொட்டியது. மரத்தின் அருகில் இருந்த சண்முகம், புவனா ஆகியோரையும் தேனீக்கள் கொட்டியது.
இதில், அக்கம்பக்கத்தினர் நால்வரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தால் லட்சுமாபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.