/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டில் திருடர்கள் 4 பேர் சிக்கினர்
/
பள்ளிப்பட்டில் திருடர்கள் 4 பேர் சிக்கினர்
ADDED : டிச 17, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரைச் சேர்ந்தவர் சிவாஜி. இவர், கடந்த 5ம் தேதி வெளியூருக்கு சென்றிருந்தார். மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் இருந்த 9 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது.
இது குறித்து விசாரித்த வந்த பள்ளிப்பட்டு போலீசார், நேற்று, பள்ளிப்பட்டைச் சேர்ந்த பெருமாள், 50, சேகர், 41, கொளத்துரைச் சேர்ந்த ஜோசப், 39, ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்த பாக்கியராஜ், 42, ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏழு சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.