தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ரூ.40,000 ‛'அபேஸ்'

பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ரூ.40,000 ‛'அபேஸ்'

பஸ்சுக்கு காத்திருந்தவரிடம் ரூ.40,000 ‛'அபேஸ்'


ADDED : செப் 26, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சித்ரா, 25. இவர். கற்பூரவள்ளி சுயஉதவி குழுவில் உறுப்பினராக உள்ளார்.

நேற்று மதியம் சித்ரா திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று, கடனாக 40,000 ரூபாய் குழு கணக்கில் இருந்து பெற்றார்.

பின், பணத்தை தன் கைப்பையில் வைத்துக் கொண்டு, பூ மார்க்கெட் காந்தி சிலை அருகே உள்ள நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, சித்ராவை அருகே பெண் ஒருவரும் நின்றிருந்தார்.

பேருந்து வந்தவுடன் சித்ரா பேருந்தில் ஏறி புறப்பட்டார். சிறிது துாரம் சென்றவுடன், தனது கைபையை பார்த்த போது, 40,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us