ADDED : ஆக 26, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
மாதவரம், ஆக. 27–
மாதவரம், சந்திர பிரபு காலனியில், குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, மாதவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் ஜெயின், 32, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 44 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.
