தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாணவ - மாணவியருக்கு வரும் 4ல் கலை போட்டி

மாணவ - மாணவியருக்கு வரும் 4ல் கலை போட்டி

மாணவ - மாணவியருக்கு வரும் 4ல் கலை போட்டி


UPDATED : ஆக 27, 2026 06:15 PM

ADDED : ஆக 27, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 06:15 PM ADDED : ஆக 27, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கலை பண்பாட்டுத் துறை சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் 4ம் தேதி கலைப்போட்டிகள் நடைபெற உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக கலை பண்பாட்டுத் துறை, ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, 2025 - -26ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை போட்டிகள், குரலிசை, பரத நாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய பிரிவுகளில், வரும் 4ம் தேதி, ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் பங்கேற்போர், 5 - 8, 9 - 12 மற்றும் 13 - 16 ஆகிய வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், மூன்று நிமிடங்கள், அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் வரை பாடுவதற்கும், நடனமாடுவதற்கும் அனுமதிக்கப்படும்.

ஓவியம் வரைய தேவையான பொருட்களை, போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ - மாணவியருக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் விபரம் பெற, 'மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, காஞ்சிபுரம் - 631 502' என்ற முகவரியிலும், 044- - 2726 9148 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us