sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.5 லட்சம் நில மோசடி: இருவர் கைது

/

ரூ.5 லட்சம் நில மோசடி: இருவர் கைது

ரூ.5 லட்சம் நில மோசடி: இருவர் கைது

ரூ.5 லட்சம் நில மோசடி: இருவர் கைது


ADDED : ஜூலை 14, 2011 10:51 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : விற்ற நிலத்தை மீண்டும் மற்றொருவருக்கு விற்று மோசடி செய்த இருவரை திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை அடுத்த அமிர்தா நல்லூர் கிராமத்தில், பொன்னேரி வேண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அவரது மகன்கள் வாசு, குமார், மகள்கள் ஜீவரத்தினம், ராகினி ஆகியோருக்கு சொந்தமாக, 8.50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை விற்க இவர்கள் அனைவரும் சேர்ந்து பொன்னேரி நயினார் மகன் சரவணனுக்கு அதிகாரம் கொடுத்தனர். இதையடுத்து சரவணனிடமிருந்து ஆவடி வசந்தம் நகரைச் சேர்ந்த கிருஷ்டப்பன் மகன் பார்த்தசாரதி என்பவர் தன் மனைவி மற்றும் மகன் பெயரில் கிரையம் பெற்றார்.



இதற்கான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் தன் பெயரில் மாற்றியுள்ளார். இந்நிலையில் இந்த, 8.50 ஏக்கர் நிலத்தில் 64 செண்ட் நிலத்தை மட்டும் பத்மநாபன் மற்றும் அவரது மகன்கள், பேட்டையைச் சேர்ந்த நில புரோக்கர் வரதப்பிள்ளை மகன் பூபதி என்பவர் தூண்டுதலின்பேரில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜன் என்பவருக்கு விற்று கிரையம் செய்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து, பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து, நில மோசடியில் ஈடுபட்ட வாசு, 32, பூபதி, 34 ஆகிய இருவரையும் கைது செய்து, கோர்ட் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்மநாபன் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us