/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீர்த்தீஸ்வரர் கோவிலில் 5 நாள் பவித்ர உற்சவம்
/
தீர்த்தீஸ்வரர் கோவிலில் 5 நாள் பவித்ர உற்சவம்
ADDED : அக் 09, 2024 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், 5 நாள் பவித்ர உற்சவம் வரும் 12ல் துவங்குகிறது.
திருவள்ளூர் பஜார் வீதியில், பிரசித்தி பெற்ற, திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்த ஆண்டிற்கான பவித்ர உற்சவம் வரும், 12ல் துவங்கி, வரும் 16 வரை 5 நாட்கள் நடக்கிறது. ஐந்து நாட்களும், காலை மாலை, யாக பூஜை, சிறப்பு ேஹாமம், பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது. வரும், 16ல் காலை நடராஜருக்கு அபிேஷகம், மாலை மஹாபூர்ணாஹூதியுடன், பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.