ADDED : செப் 09, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் அருகே வாலிபர்களை கத்தி காட்டி மிரட்டி, பைக்கை பறித்துச் சென்ற ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமாவாசை, 22. இவர், நேற்று முன்தினம் மாலை, ‘ஹூரோ ஹோண்டா ஸ்பிளண்டர்’ பைக்கில், நண்பர்களான கார்த்திக், 20, மற்றும் 17 வயது சிறுவனுடன், கனகம்மாசத்திரம் பஜாருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
ராமாபுரம் அருகே வந்த போது, பின்னால் இரண்டு பைக்குகளில் வந்த ஐவர் கும்பல், அமாவாசையின் வாகனத்தை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்து சென்றது. இதுகுறித்து, நேற்று அமாவாசை அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
