/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அருகே தகராறு 5 பேருக்கு கத்தி வெட்டு 14 பேர் மீது வழக்கு பதிவு

ADDED : நவ 09, 2025 03:25 AM
திருத்தணி: திருத்தணி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில், கத்திகளுடன் மோதிக் கொண்டதில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக, 14 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிகன்னைய்யா, 40, வேலு, 58. உறவினர்களான இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை, வேலு தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற போது, முனிகன்னைய்யாவுக்கும், வேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, வேலுக்கு ஆதரவாக ஸ்ரீகாந்த், சந்தோஷ், பிரவீன்குமார், சாந்தி, சுமதி, பவா, புவனா, அம்முவும், முனிகன்னைய்யாவுக்கு ஆதரவாக வெங்கடேசன், ரமேஷ், டில்லிபாபு, மதி ஆகியோர் கத்தி, உருட்டு கட்டைகளுடன் ஒருவரையொருவர் தாக்கியும், வெட்டியும் கொண்டனர்.
இதில், வேலு, சுமதி, ரமேஷ், முனிகன்னைய்யா, டில்லிபாபு ஆகிய ஐந்து பேருக்கு தலை, கை ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. இவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, இருதரப்பினரும் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார், 14 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.